கொரோனாவையும் மிஞ்சிய கொடூரம்.! பெற்ற தாயை பேருந்து நிலையத்தில் பரிதவிக்க விட்டு சென்ற மகன்!
கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பல மாநிலங்களில் சமூகப்பரவல் ஏற்பட்டுள்ள நிலையில், கட்டுப்படுத்தும் பணிகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டுவருகிறது.
இந்த நிலையில், ஆந்திராவில் பெற்ற தாயை, கொரோனா பாதிப்பு காரணமாக பேருந்து நிலையத்திலேயே அவரது மகன் விட்டுச் சென்றுள்ள சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் மாச்சர்லா பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு கடையின் முன்பு 68 வயதான மூதாட்டி ஒருவர் அமர்ந்திருந்தார். நீண்ட நேரமாக அவர் ஒரே இடத்தில் அமர்ந்து இருந்த நிலையில், அங்கிருந்த பொதுமக்கள் அவரிடம் சென்று விசாரித்துள்ளனர்.
இதனையடுத்து அந்த அம்மா பொதுமக்களிடம் கூறுகையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கோவாவில் உள்ள உறவினர் வீட்டிற்கு தான் சென்று வந்ததாகவும் அப்போது கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் எனக்கு தொற்று உறுதியானது. இதனால் எனது மகன் இங்கு கொண்டு வந்து விட்டு சென்று விட்டான் என்று தெரிவித்தார்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு வந்து அவரை கொரோனா நோயாளிகளுக்கான மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மேலும், அந்த மூதாட்டி அமர்ந்திருந்த சுற்றுப்பகுதியில் கிருமி நாசினிகளை கொண்டு சுத்தம் செய்யும் பணியில் குண்டூர் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர்.