#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
10-ஆம் வகுப்பா அது போதும் ரயில்வேயில் வேலை; யாரும் மிஸ் பண்ணிடாதிங்க.!
தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் (South Eastern Central Railway) 432 டிரேட் அப்ரண்டிஸ் (Trade Apprentice) காலிப் பணியிடங்களை நிரப்ப ஐடிஐ, பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேர்வு செய்யப்படுபவர்கள் தென்கிழக்கு மத்திய ரயில்வேக்கு உட்பட்ட பிலாபூர், சத்தீஸ்கர் டிவிஷனில் பணி அமர்த்தப்பட உள்ளார்கள். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
https://secr.indianrailways.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கும் அவகாசம் தொடங்கும் நாள் - ஜூன் 16, 2019 ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் - ஜூலை 15, 2019 (மாலை 6 மணி வரை)
எலெக்ட்ரீசியன், வயர்மேன், ஸடெனோகிராபர், ஃபிட்டர், வெல்டர், பிளம்பர், மேசன், பெயிண்டர், டியூனர் முதலான 16 பிரிவுகளில் 6 முதல் 90 காலிப் பணியிடங்கள் வரை மொத்தம் 432 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பொதுப்பிரிவினர் ஜூலை 16, 2019 அன்று 15 முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
பொதுப்பிரிவினர் மற்றும் ஓபிசி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.100. எஸ்.சி., எஸ்.டி பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு கட்டணம் கிடையாது. கட்டணத்தைச் செலுத்த டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் முறையை பயன்படுத்த வேண்டும்.
மேலும், விவரங்களுக்கு இந்த அதிகாரப்பூர்வ விளம்பரத்தை பார்க்கலாம். https://secr.indianrailways.gov.in