லட்டு திருவிழாவில் திடீரென சரிந்து விழுந்த மேடை.! 7 பேர் பலி!! 50க்கும் மேற்பட்டோர் காயம்!!



Stage collapse 7 people dead

உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டம் பராவுத்தில் ஜெயின் சமூகத்தினரின் மத வழிபாட்டு தலம் உள்ளது. அங்கு ஆண்டுதோறும்  'லட்டு திருவிழா' நடைபெறும். அவ்வாறு இந்த ஆண்டும் லட்டு திருவிழா இன்று நடைபெற்றது.

வழிபாட்டு தலத்தில் பக்தர்களுக்காக மூழ்கில் கம்புகளால் மேடை அமைக்கப்பட்டிருந்தது. இந்த விழாவில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இந்நிலையில் திடீரென அந்த மூங்கில் மேடை சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

uttarapradesh

மேலும் தகவலறிந்து உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், மீட்புக்குழுவினர் ஆம்புலன்ஸ் மூலமாக காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் காயமடைந்த சிலர் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ரயில் பயணத்தில் டீ வாங்கி குடிக்கிறீங்களா? கொஞ்சம் இந்த வீடியோவை பார்த்துட்டு முடிவு பண்ணுங்க பிளீஸ்.! 

 

இதையும் படிங்க: Watch: 3 வது மாடியில் 2 வயது சிறுவனுக்கு காத்திருந்த எமன்; தெய்வமாக உயிரை காப்பாற்றிய நபர்.!