#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடத்தையில் சந்தேகப்பட்ட கணவர்... மனைவி எடுத்த விபரீதம் முடிவு... வெளியான பகீர் உண்மை.!
மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அவருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்த கணவரை ஆத்திரத்தில் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக மனைவியை கைது செய்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள வரந்தரபள்ளிப் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் யுவர் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி நிஷா தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த சில காலங்களாகவே மனைவியின் நடத்தையில் கணவருக்கே சந்தேகம் இருந்து வந்திருக்கிறது.
இந்நிலையில் நிஷாவின் செல்போன் இருக்கு வினோத் கால் செய்த போது நீண்ட நேரம் பிஸி என வந்திருக்கிறது. ஏற்கனவே நிஷாவின் மீது சந்தேகத்திலிருந்து அவர் இது குறித்து கேள்வி கேட்டு தகராறு செய்திருக்கிறார். அப்போது இருவருக்குமிடையே ஏற்பட்ட மோதலில் கத்தியை எடுத்து தனது கணவரை குத்தி இருக்கிறார் நிஷா. இந்த சம்பவத்தில் ரத்த வெள்ளத்தில் விழுந்த வினோத்தை மீட்டு கீழே விழுந்ததாக கூறி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
அங்கே சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் வினோத். இது தொடர்பாக காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நிஷாவிடம் விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்தார். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரிடம் தீவிரமாக விசாரித்ததில் தனது கணவரை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதனைத் தொடர்ந்து அவரிடமிருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் வினோத்தின் ஆடைகள் பறிமுதல் செய்யப்பட்டன.