#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
#Breaking: நெருங்குகிறது... 11 மாவட்டங்களில் நாளை விடுமுறை; புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அக்.17 அன்று ஆந்திரா கடலோரப்பகுதி சென்னை இடையே கரையை கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பள்ளிகளுக்கு விடுமுறை
புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகம் 35 கிமீ - 55 கிமீ வேகத்தில் இருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்நிலையில், நாளை கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் சோகம்... நீச்சல் குளத்தில் மூழ்கி பலியான 5 வயது குழந்தை.!! கதறிய பெற்றோர்.!!
பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், இராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில் செயல்படும் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வங்கக்கடலில் புயல் உருவாகியுள்ளதை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாட்டில் இருக்கும் சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, நாகப்பட்டினம், காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இதில் சென்னை, கடலூர், எண்ணூர், புதுச்சேரி ஆகிய துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #JustIN: வெளுத்து வாங்கிய மழை; 4 எக்ஸ்பிரஸ் இரயில்கள் ரத்து.. விபரம் இதோ.!