மனைவியை கொன்று குக்கரில் சமைத்த கணவன்.. ஹைதராபாத்தில் நெஞ்சை நடுங்கவைக்கும் சமபவம்.!



Telangana Hyderabad Husband Killed a Wife 

கணவன் - மனைவி சண்டையில், மனைவியை கொலை செய்த நபர் உடலை சமைத்து ஏரியில் வீசிய பயங்கரம் நடந்துள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத், மீர்பேட் பகுதியில், மனைவியை கொலை செய்த நபர், உடலை துண்டு-துண்டாக்கி பிரஷர் குக்கரில் வேகவைத்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

காவல்துறை விசாரணை

சம்பந்தப்பட்ட பெண்ணின் பெற்றோர், தங்களின் மகளை கடந்த ஒரு வாரமாக காணவில்லை என்று கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதையும் படிங்க: 7 மாத கர்ப்பிணியின் வயிற்றில் அமர்ந்து கொடூர கொலை.. சிசு வெளியேறி பெண் துள்ளத்துடிக்க மரணம்.!

விசாரணையில், பெண்ணின் கணவரின் மீது சந்தேகம் எழுந்துகொள்ளவே, அதிகாரிகள் அவரை விசாரணை வளையத்தில் கொண்டு விசாரித்து இருக்கின்றனர். 

Telangana

மனைவி கொலை உறுதி

அதாவது, சம்பவத்தன்று கணவர் - மனைவி சண்டையில் வாக்குவாதம் நடந்துள்ளது. இந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த நபர், தனது மனைவியை கொலை செய்துள்ளார்.

பின் ஆத்திரத்தில் கொலை செய்துவிட்டோம் என உணர்ந்தவர், மனைவியை துண்டு துண்டாக வெட்டி குக்கரில் வேகவைத்து உடலை ஏரியில் வீசி இருக்கிறார் என தெரிவித்துள்ளார். 

13 ஆண்டுகளுக்கு முன் திருமணம்

35 வயதாகும் மாதவி, அவரின் கணவர் குருமூர்த்தியால் கொலை செய்யப்பட்டு இருக்கிறார். கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்த ஜோடிக்கு, 2 மகள்கள் இருக்கின்றனர். 

சம்பவத்தன்று மாதவியின் சகோதரி வீட்டிற்கு வந்தபோது, அவர் மாயமானதாக குருமூர்த்தி தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்து காவல் நிலையத்தில் அளித்த புகாரில் அதிர்ச்சி உண்மை அம்பலமாகியுள்ளது.

இதையும் படிங்க: #Breaking: ஒரு நிமிடம் பொறுத்திருக்கலாமே? அரசுப்பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் துள்ளத்துடிக்க மரணம்... பதறவைக்கும் காட்சிகள்.!