பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
ஆசையோடு தாலி கட்ட வந்த மணமகன்... குடிப்போதையில் வந்த காதலனுடன் மணப்பெண் சென்றதால் ஏற்பட்ட பரபரப்பு.!
தெலங்கானா மாநிலம் கரீம் நகரை சேர்ந்தவர் பிரவீன்குமார். இவருக்கும் திவ்யா என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட நிலையில் நேற்று முன் தினம் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
மணமேடையில் மணமகன் ஆசையோடு மணப்பெண்ணுக்கு தாலிக்கட்ட தயாரான சமயத்தில் திடீரென குடிப்போதையில் வம்சி என்ற இளைஞன் மணமேடையின் முன் வந்து நின்று நான் தான் திவ்யாவின் காதலன் என கூறி திவ்யாவை அழைத்துள்ளார்.
வம்சி கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார் மணமகன். அதே சமயத்தில் மணப்பெண்ணும் வம்சியுடன் செல்ல தயாராகியுள்ளார். இதனால் கோபமான மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.
அதனையடுத்து போலீசார் பிரவீன் குமார், திவ்யா மற்றும் வம்சி ஆகியோரை விசாரித்துள்ளனர். அதில் திவ்யா, தான் வம்சியை காதலிப்பதாகவும் அவருடன் தான் வாழ விரும்புவதாகவும் கூறியுள்ளார். மேலும் வம்சி மீது பிரவீன் குமார் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி வழக்கு பதிவு செய்ததை அடுத்து வம்சியை போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.