தொடர்கதையாகும் ஆழ்துளை கிணறு மரணம்., பறிபோன இரண்டரை வயது குழந்தையின் உயிர்.!!



The death of a borehole is continued, The life of a two-and-a-half-year-old child was died

ழ்துளை கிணற்றில் விழுந்து இறந்து போகும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளடைவில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டரை வயது குழந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள விடிசா மாவட்டத்தில் கஜாரி பர்கீதா என்கின்ற கிராமம் ஒன்றில் வசித்து வருபவர் இந்தர்சிங். இவரது வீட்டில் பின்புறம் ஒரு ஆழ்துளை கிணறு அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பவ தினத்தன்று அந்த ஆழ்துளை கிணற்றுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஸ்மிதா என்னும் இரண்டரை வயது குழந்தை அந்த குழிக்குள் விழுந்து உள்ளது.

இதை பார்த்து பதட்டம் அடைந்த பெற்றோர்கள் இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்பு மீட்பு குழுவினர் உடனே குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பல மணி நேர போராட்டத்திற்கு பிறகும் குழந்தையை உயிருடன் மீட்க முடியவில்லை, சடலமாகவே மீட்கப்பட்டார். இதனால் பெற்றோர் கதறி அழுதுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.