#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கிளம்ப தயாராக இருந்த விமானம்: பூனை போல குறுக்கே வந்த கார்!,: பரபரப்பில் விமான நிலைய ஊழியர்கள்..!
புது டெல்லி, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 2வது முனைய பகுதியில் இண்டிகோ விமான சேவை வழங்கும் நிறுவனத்தின் விமானம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அந்த விமானம் பீகார் மாநிலம், பாட்னா நகருக்கு இன்று புறப்பட்டு செல்ல தயார் நிலையில் இருந்தது.
இந்த நிலையில், அந்த விமானத்தின் மூக்கு பகுதி என்று கூறப்படும் முன் பகுதியின் கீழே மாருதி கார் ஒன்று வந்து நின்றது. அதன் பின்னர் அந்த கார் இயங்கவில்லை. இதன் காரணமாக, அந்த விமானம் புறப்பட்டு செல்வதில் தடங்கல் ஏற்பட்டது. இதனால் விமான பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாயினர்.
#WATCH | A Go Ground Maruti vehicle stopped under the nose area of the Indigo aircraft VT-ITJ that was parked at Terminal T-2 IGI airport, Delhi. It was an Indigo flight 6E-2022 (Delhi–Patna) pic.twitter.com/dxhFWwb5MK
— ANI (@ANI) August 2, 2022
இண்டிகோ நிறுவனத்தின் விமானம், கடந்த சில மாதங்களாகவே இடையூறுகளில் சிக்கிவருவது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூலை 28 ஆம் தேதி அசாம் விமான நிலையத்தில் இருந்து கொல்கத்தாவுக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம் திடீரென விமான ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்றது. இதன் பின்னர் அந்த விமானம் நிறுத்தப்பட்டதுடன், அதில் ஏற்பட்ட தொலிநுட்ப கோளாறை 6 மணிநேரம் போராடியும் அந்த பணி தோல்வியில் முடிந்தது.
கடந்த ஜூலை மாதம், 21 ஆம் தேதி இண்டிகோ விமான பயணி ஒருவர் வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். உடனடியாக அந்த விமானம் பாட்னா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு பயணிகள் இறக்கி விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.