"மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்கள்; நிச்சயம் பதிலடி" பிரதமர் மோடி உறுதி



They should be punished pm about kashmir attack

புல்வாமா மாவட்டம், அவந்திபுராவில், ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில், சிஆர்பிஎப் வீரர்கள் வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். ஜம்முவில் இருந்து ஸ்ரீநகரில் உள்ள முகாமுக்கு வீரர்கள் இந்த வாகனங்களில் சென்றனர்.

மொத்தம் 70 வாகனங்கள் அணி வகுத்துச் சென்றன. அப்போது அவர்கள் சென்ற வாகனங்களை குறி வைத்து குண்டுகள் வெடித்தன. அதில் குண்டு வெடித்த வாகனத்தில் இருந்த ஏராளமான வீரர்கள் சிக்கிக் கொண்டனர். பயங்கர தாக்குதலில் 44 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 

pm modi

பாதுகாப்பு படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு நேரடி தொடர்பு இருப்பதாக, மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டிருந்த, தொழில்-வர்த்தகத்திற்கு சாதகமான நாடு என்ற அந்தஸ்தையும் இந்தியா பறித்துள்ளது. 

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய பிரதமர் மோடி, "காஷ்மீர் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும். அவர்கள் மிகப்பெரிய தவறினை செய்துவிட்டார்கள். அதற்கான மிகப்பெரிய விலையை கொடுத்தே தீர வேண்டும்" என உறுதியளித்துள்ளார்.