திருடிய செல்போனை திருப்பி கொடுத்த திருடன்!! அவன் சொன்ன காரணத்தை கேட்டு அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்ற உரிமையாளர்..



Thief snatches a flagship Samsung phone and returns it

தான் திருடிய போனை திருடன் ஒருவன் உருமையாளரிடமே கொடுத்ததும், அதற்கு அவர் கூறிய காரணமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் பல இடங்களில் தினமும் திருட்டு சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் உத்திரபிரதேசத்தில் நடந்த ஒரு திருட்டு சம்பவம் சற்று வித்தியாசமானது. ஆம், உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணி ஒருவரிடம் இருந்து திருடன் செல்போனை திருடிக்கொண்டு ஓடிவிட்டான்.

தனது செல்போனை தொலைத்தவர் என்ன செய்வது என்று தெரியாமல் அங்கையே நின்றுகொண்டிருந்தநிலையில், செல்போனை திருடிச்சென்ற நபர், திரும்ப வந்து அந்த செல்போனை அதன் உரிமையாளாரிடம் ஒப்படைத்தார். இது ஒரு ஆச்சரியம்தான் என்றாலும், திருடிய போனை ஏன் திருப்பி கொடுத்தேன் என்பதற்கு அந்த திருடன் சொன்ன காரணம்தான் ஹைலைட்.

ஆம், அந்த போன் ஒன் ப்ளஸ் என நினைத்துதான் தான் திருடியதாகவும், ஆனால் அது ஒன் ப்ளஸ் இல்லை சாம்சங் Galaxy S10 Plus என்று தெரிந்ததும், இந்த போன் தனக்கு தேவை இல்லை என்றே திருப்பி கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Viral News