பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
காருக்குள்ள மனைவி.. வெளியில் விட்டுச்சென்ற நபர்.. திரும்பி வந்து பார்த்தபோது காத்திருந்த அதிர்ச்சி..
காருடன் சேர்த்து காருக்குள் இருந்த கார் ஓனரின் மனைவியையும் திருடர்கள் கடத்திச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ராஜிவ் சந்த், அவரது மனைவி ரித்து. இவர்கள் இருவரும் கடந்த வியாழக்கிழமை மதியம் 1 மணியளவில் தனது குழந்தைகள் பையிலும் பள்ளியில் கல்வி கட்டணம் செலுத்துவதற்காக காரில் சென்றுள்ளனர். இருவரும் பள்ளி அருகே வந்தபோது ராஜிவ் சந்த் தனது மனைவியை காரிலையே இருக்கும்படி கூறிவிட்டு பள்ளிக்குள் கல்வி கட்டணம் செலுத்துவற்காக சென்றுள்ளார்.
மேலும் தனது மனைவி காரிலையே இருப்பதால் ராஜிவ் சந்த் கார் சாவியையும் எடுக்கவில்லை. இதனை கவனித்த 2 கார் திருடர்கள் திடீரென காருக்குள் ஏறியுள்ளனர். ஒரு திருடன் காரை ஓட்ட, மற்றொரு திருடன் காரின் பின்பக்க சீட்டில் ஏறி, அங்கு அமர்ந்திருந்த ரித்துவின் வாயை மூடிக்கொள்ள, இருவரும் காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
சுமார் 5 கி.மீ தூரம் சென்றதும் அங்கிருந்த அம்பாலா டோல் பிளாசா அருகே ரித்துவை கீழே தள்ளிவிட்டு காரை மட்டும் ஓட்டிச் சென்றுவிட்டனர். இதனிடையே கல்வி கட்டணம் செலுத்த பள்ளிக்கு சென்றிருந்த ராஜிவ் சந்த் தனது கார் மற்றும் மனைவியை காணமால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பின்னர் நடந்த சம்பவம் குறித்து தம்பதியினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களையும் பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.