பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
கடந்த ஆண்டு திருப்பதி உண்டியல் காணிக்கை பல கோடிகளை தாண்டி சாதனை! எவ்வளவு தெரியுமா?
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 2019-ம் ஆண்டு உண்டியல் வருமானம் ரூ.1161 கோடியே 74 லட்சம் வந்துள்ளது. 2 கோடியே 79 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலின் கடந்த ஆண்டு உண்டியல் காணிக்கை மட்டும் 1161 கோடி ரூபாயை தாண்டி சாதனை படைத்துள்ளது. 2018 ஆம் ஆண்டில் கிடைத்த காணிக்கையை விட இது சுமார் 95 கோடி ரூபாய் அதிகம் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
மேலும் தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம் என கிடைத்த காணிக்கைகளின் மதிப்பு பகிரங்கமாக அறிவிக்கப்படவில்லை. அதே போன்று திருமலையில் உள்ள தங்கும் விடுதிகள் மூலம் கிடைக்கும் வருடாந்திர வருவாய் கடந்த ஆண்டு 83 புள்ளி 71 கோடி ரூபாய் என்ற உச்சத்தைத் தொட்டுள்ளது.
2019-ம் ஆண்டு 2 கோடியே 79 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். 12 கோடியே 49 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.