#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
குடிகார கணவனின் செயல்.. கடுப்பில் சுத்தியலால் அடித்தே கொலை செய்த மனைவி.!
திருவள்ளூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் கருணாகரன். இவரின் மனைவி சரஸ்வதி. தம்பதிகளுக்கு திருமணம் முடிந்து பல ஆண்டுகள் ஆகும் நிலையில், இருவருக்கும் 3 குழந்தைகள் இருக்கின்றனர்.
இதனிடையே, மதுபானம் அருந்தும் பழக்கம் கொண்ட கருணாகரன், தினமும் மதுபானம் அருந்திவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: ரிசப்சனில் ஓட்டம்பிடித்த மணமகனுடன் திடீர் கல்யாணம்; இப்படியும் காதல் திருமணம்?.. திருவள்ளூரில் சுவாரஷ்யம்.!
கணவர் அடித்தே கொலை
இதனிடையே, சம்பவத்தன்று தம்பதிகளுக்கு இடையே தகராறு நடந்துள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சரஸ்வதி, கணவரை சுத்தியலால் சரமாரியாக தாக்கி இருக்கிறார்.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த கருணாகரன் மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 9 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்தவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், சரஸ்வதியை கைது செய்தனர்.
இதையும் படிங்க: குடிபோதையில் தகராறு செய்த கணவன்... சுத்தியலால் மண்டையை பிளந்த மனைவி.!! அதிர்ச்சி சம்பவம்.!!