டிக் டாக்கிற்கு நிரந்தர தடை.. 59 சீன செயலிகளை நிரந்தரமாக தடை செய்தது இந்தியா.. அதிரடி உத்தரவு..



TikTok India Ban Now Permanent along with 58 other apps

டிக் டாக், ஹலோ உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு நிரந்தரமாக தடைவித்துள்ளது.

கடந்த ஆண்டு இந்தியா - சீனா எல்லை நடந்த பிரச்னையை அடுத்து, சீனாவிற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது இந்திய அரசு. அதன் ஒரு பகுதியாக இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு ஆகிவற்றை பாதிக்கும் விதமாக செயல்படுவதாக கூறி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.

Tik Tok Ban

அதனை தொடர்ந்து மேலும் 250 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. மேலும் இந்திய வாடிக்கையாளர்களின் விவரங்களை சேகரித்தல், அவரை பயன்படுத்தும் முறை குறித்து சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் தகவல் தொழில்நுட்பத்துறைக்கு விளக்கமளிக்கவேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் சீன நிறுவனங்கள் கொடுத்த விளக்கம் திருப்தி அளிக்கக்கூடிய வகையில் இல்லை எனவும், 59 செயலிகளும் இந்தியாவில் நிரந்தரமாக தடைசெய்யப்படுவதாகவும் மத்திய அரசு தற்போது அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் சீன நிறுவனங்கள் இந்தியாவில் சட்ட ரீதியாக இந்த பிரச்னையை எதிர்கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.