"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
கிரேன் சக்கரம் ஏறி-இறங்கி பயங்கர விபத்து; விசிக மகளிரணி செயலாளர் உடல் நசுங்கி பலி..!
விசிக மகளிரணி செயலாளர்
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பெருமாநல்லூர் பகுதியில் வசித்து வருபவர் செந்தில்குமார். இவரின் மனைவி காளியாதேவி (வயது 40). இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிரணி செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். மேலும், பெருமாநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் மேலாண்மை குழு தலைவராகவும் இருக்கிறார்.
இதையும் படிங்க: இரண்டு பேருந்துக்கு நடுவே சிக்கி இளைஞர் பரிதாப பலி; போதை ஓட்டுனரால் நடந்த சோகம்.. கோவையில் துயரம்.!
கிரேன் சக்கரம் ஏறி-இறங்கி சோகம்
இந்நிலையில், சம்பவத்தன்று இருசக்கர வாகனத்தில் பெருமாநல்லூர் செல்லும் சாலையில், ஸ்ரீபாத கருப்பராயன் கோவில் அருகே வாகனத்தை இடதுபுறமாக நிறுத்திவிட்டு காத்திருந்தார். அச்சமயம் அவ்வழியாக வந்த கிரேன் ஒன்று, கழியாதேவியின் மீது மோதி விபத்திற்குள்ளானது.
மருத்துவமனையில் அனுமதியான சில நிமிடங்களில் துயரம்
இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த காளியாதேவியின் மீது கிரேன் சக்கரங்கள் ஏறி இறங்கியது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், காளியாதேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: கூகுள் மேப்பை பார்த்து, 7 பேரின் உயிரோடு விளையாடிய பெண்.! சென்னையில் விபரீதம்.!