மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இரண்டு பேருந்துக்கு நடுவே சிக்கி இளைஞர் பரிதாப பலி; போதை ஓட்டுனரால் நடந்த சோகம்.. கோவையில் துயரம்.!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபுரம் பேருந்து நிலையத்தில், பேருந்து ஓட்டுநர் ஒருவர் பேருந்தை பின்னோக்கி எந்த விதமான முன்னறிவிப்பும் இன்றி இயக்கி இருக்கிறார். இந்த பேருந்துக்கு பின்னால் ஒரு பேருந்து இருந்துள்ளது.
இளைஞர் உடல் நசுங்கி பலி:
இந்நிலையில், இரண்டு பேருந்துக்கு நடுவே இருந்த இளைஞரின் மீது பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில், இளைஞர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: கூகுள் மேப்பை பார்த்து, 7 பேரின் உயிரோடு விளையாடிய பெண்.! சென்னையில் விபரீதம்.!
போதையில் இருந்த ஓட்டுனரால் சோகம்
விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும், அவர் மதுபோதையில் இருந்ததே விபத்திற்கு காரணம் எனவும் தெரியவந்துள்ளது. விபத்தில் பலியான நபர் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும், விபத்தை ஏற்படுத்திய ஓட்டுனரை பொதுமக்கள் மற்றும் விபத்தில் தொடர்பு இல்லாத மற்றொரு பேருந்தின் நடத்துனர் ஆகியோர் ஆத்திரத்தில் தாக்கிய காட்சிகளும் வைரலாகி வருகின்றன.
"தமிழக அரசின் வீரன்" படுத்தும் பாடு சற்றுமுன் கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து மோதி இளைஞர் உயிரிழப்பு
— Gowri Sankar D - Say No To Drugs & DMK (@GowriSankarD_) May 15, 2024
தனியார் பேருந்து ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததாக தகவல். அவரைக் கைது செய்து போலீசார் விசாரணை pic.twitter.com/J0J4SNNdDw
இதையும் படிங்க: அதிகாலையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அரசு - ஆம்னி பேருந்து மோதி விபத்து; 24 பேர் காயம்.!