பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
ஒரே நாளில் குறைந்த தங்கத்தின் விலை. இன்று ஒரு சவரன் தங்கத்தின் விலை இதுதான்!
கடந்த மாதத்தில் இருந்து தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து ஒரு கட்டத்தில் ஒரு சவரன் நகை 30 ஆயிரம் ரூபாயை கடந்து நடுத்தர குடும்ப மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. வரலாறு காணாத விலையேற்றத்தால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கவலையில் ஆழ்ந்தனர்.
இந்நிலையில் தங்கத்தின் விலை தற்போது சற்று குறைந்து மீண்டும் 29 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு சவரன், 28 ஆயிரத்துக்கு 776 ரூபாய்க்கும், ஒரு கிராம் ஆபரணத்தங்கம் விலை 45 ரூபாய் குறைந்து மூவாயிரத்து 597 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை சற்று குறைந்துவருவதால் நடுத்தர மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்னனர்.