#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
#Breaking: புதிய உச்சம் தொடப்போகும் தங்கம், வெள்ளி விலை.. இன்று கிடுகிடு உயர்வு.!
உலகளவில் நடைபெறும் போர்கள், பொருளாதார பிரச்சனை உட்பட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை என்பது கடுமையான உச்சத்தை சந்தித்து இருக்கிறது. இந்தியாவில் முன்னதாக தங்கத்தின் மீதான இறக்குமதி சுங்கவரி 15% என்ற அளவில் இருந்தது.
குறைந்த தங்கத்தின் விலை
இதனால் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் சவரன் விலை ரூ.50 ஆயிரத்தை கடந்து இருந்தது. நகை வாங்க நினைத்தோர் பலரும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி இருந்தனர். இதனிடையே, தங்கம் மற்றும் வெள்ளியின் இறக்குமதி வரி குறைத்து அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: தக்காளியின் விலை திடீர் உயர்வு; கிலோ ரூ.70 க்கு விற்பனை.!
வரி குறைப்பால் தங்கத்தின் விலை இறக்கத்தை சந்தித்தாலும், மத்திய கிழக்கு பதற்றம் மற்றும் நுகர்வோர் விருப்பம் போன்றவை தங்கத்தின் விலையை மீண்டும் உச்சத்திற்கு தள்ளி வருகிறது. விரைவில் ரூ.57 ஆயிரம் என்ற நிலையை தங்கம் எட்டிப்பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று தங்கம் வெள்ளி விலை
இந்நிலையில், சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 அளவில் உயர்ந்து, ரூ.56,960 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் தங்கத்தின் ரூ.7,120 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையும் கிலோவுக்கு 103000 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் வெள்ளியின் விலை நெற்றில் இருந்து ரூ.2 உயர்ந்து இன்று ரூ.103 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: காதல் திருமணம் நடந்த 7 ஆண்டுகளில் துயரம்: பலபெண்களுடன் கணவன் நெருக்கம்; மனைவி விபரீதம்..!