இந்தியாவிலையே அதிகபட்ச அபராத தொகை இதுதானாம்! வாகன ஓட்டிகளே உஷார்!



Traffic police fined 86 thousand for lorry driver

சாலை விதிகளை மீறுவது குறித்து மத்திய அரசு தீவிர ஆலோசனைக்கு பிறகு மோட்டார் வாகன சட்டத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்தது. இதன்படி விதிகளை மீறினால் அதிக அளவில் அபராதத்தொகை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த சட்டம் செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வந்தது.

சட்டம் அமலுக்கு வந்ததில் இருந்தே இதுகுறித்த பல்வேறு செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் சாலை விதியை மீறிய குற்றத்திற்காக லாரி ஓட்டுநர் ஒருவருக்கு 86 ஆயிரத்து 500 ருபாய் அபராதமாக விதிக்கப்பட்டிருக்கிறது. சட்ட திருத்தம் அமல்படுத்தப்பட்ட நாளிலிருந்து இந்த அபராத தொகையே நாட்டின் அதிகபட்ச அபராதம் என கூறப்படுகிறது.

Traffic fine

ஒடிசா மாநிலத்தின் சம்பல்பூர் மாவட்டத்தில் அசோக் ஜாதவ் என்ற லாரி ஓட்டுநர் லாரியில் அதிக அளவு சுமையுடன் வந்ததாகவும், தனக்கு பதிலாக கிளீனரை வண்டியை இயக்க செய்ததாகவும், அவருக்கு ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கவில்லை என்பதற்காகவும், வேறு ஒருசில குற்றங்களுக்கும் சேர்த்து அவருக்கு 86 ஆயிரத்து 500 ருபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட ஓட்டுநர் போலீசாரிடம் எவ்வளவோ கெஞ்சியும் அவர்கள் அவரை விடுவதாக இல்லை. கடைசியில் அவர் 70 ஆயிரம் பணத்தை அபராதமாக கட்டிய பின்னரே அங்கிருந்து விடுவிக்கப்பட்டதாக போலீசார் கூறிஉள்னனர்.