#Watch: தலை விக், ப்ராவுக்குள் வைத்து ரூ.8 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: உகாண்டா பெண் மும்பையில் கைது.!



Uganda Girl Arrested by Indian Customs after Smuggling Cocaine Drugs 


வெளிநாடுகளில் இந்தியா வரும் இந்தியர்கள் தங்கம் உட்பட பிற பொருட்களை கடத்தி வந்து சிக்குவது தொடர்கதையாவது ஒருபுறம் இருந்தால், மற்றொரு பக்கத்தில் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் போதைப்பொருள் கடத்தி வந்து இந்திய சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்குகின்றனர். 

இவர்களும் தங்கக்கடத்தலை போல போதைப்பொருளை கடத்த பல்வேறு நுணுக்கமான செயல்களை மேற்கொண்டாலும், அதனை அதிகாரிகள் திறம்பட கண்டறிந்து தவிடுபிடியாக்கி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று உகண்டா நாட்டில் இருந்து மும்பை வந்த பெண்மணி தனது தலை மற்றும் பிராவில் மறைத்து வைத்து ரூ.8 கோடி மதிப்பிலான கோகையின் போதைப்பொருளை கடத்தி சிக்கிக்கொண்டார். 

அவர் தனது தலையில், தலைமுடிக்குள் எப்படி போதைப்பொருளை பதுக்கி வைத்து கடத்தினர் என்பது தொடர்பான வீடியோ வெளியாகி இருக்கிறது.

மும்பை விமான நிலையத்தில் ரூ.8 கோடி மதிப்புள்ள கோகோயின் போதைப்பொருளுடன் உகாண்டா நாட்டு பெண் பிடிபட்டார். இந்த கோகைனை அவள் விக் மற்றும் பிராவில் மறைத்து வைத்திருந்தாள். முழு வீடியோவை பார்க்கவும் -