"தடை அதை உடை.." மும்பை தாராவியின் முதல் ராணுவ வீரர்.! 13 முறை முயன்று வெற்றி.!



umesh-keelu-of-mumbai-was-the-first-army-officer-hails

மும்பையின் தாராவியில் உள்ள குடிசைப் பகுதியைச் சேர்ந்த உமேஷ் கீலு, சென்னையில் உள்ள அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் (OTA) பட்டம் பெற்று இந்திய இராணுவத்தின் லெப்டினன்ட் ஆக தேர்வாகியுள்ளார்.

Lieutenant

தனது இருபதுகளில் இருக்கும் லெப்டினன்ட் கீலு, தாராவியில் இருந்து குறுகிய சேவை ஆணையத்தின் (எஸ்.எஸ்.சி) பயிற்சி நிறுவனமான ஓ.டி.ஏ.வில் அதிகாரியாக தேர்ச்சி பெற்ற முதல் நபர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார்.

சனிக்கிழமை ஓ.டி.ஏ.வில் இருந்து வெளியேறிய சில மணி நேரங்களுக்குப் பிறகு கீலு கூறியதாவது, "இந்திய ராணுவத்தில் அதிகாரியாகும் முதல் நபர் நான்தான். என்னைப் பார்த்தால் இன்னும் பலர் ஆயுதப் படையில் சேர உத்வேகம் பெறுவார்கள்" என்று மகிழ்ச்சியுடன் கூறி இருக்கிறார்.

Lieutenant

பட்டப்படிப்பு முடித்து மூன்று ஆண்டுகள் டி.சி.எஸ்ஸில் வேலை செய்த பின்பு, ராணுவ அதிகாரி படிப்புக்கான தேர்வில் 13 முறை முயற்சி செய்து தற்போது வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு இவர் உதாரணமாக திகழ்கிறார்.