பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
பாலஸ்தீனியத்தை காப்பாற்றக்கூறி, முகநூலில் பதிவிட்ட உபி காவலர் பணியிடைநீக்கம்.!
இஸ்ரேல் - பாலஸ்தீனிய இடையே நடைபெறும் போர், இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இஸ்ரேல் படைகள் பாலஸ்தீனியத்தின் காசா நகருக்குள் நுழைந்து ஹமாஸ் பயங்கரவாதிகளை வேட்டையாடி வருகிறது.
இந்த விவகாரத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருப்பதாக அறிவித்தாலும், அமெரிக்கா ஆயுதங்களை இஸ்ரேலுக்கு வழங்கியது.
மத்திய கிழக்கு நாடுகளை பதறவைத்து, இஸ்ரேலுக்கு தான் இருக்கிறேன் என்ற எண்ணத்தை உருவாக்க விமானம் தாங்கி போர்கப்பலையும் அனுப்பி வைத்துள்ளது. ஆனால், போரின் முடிவை எட்டும்போது இஸ்ரேலின் செயல்பாடுகள் மடைமாறிப்போவது போல தெரிவதால், அமெரிக்கா இஸ்ரேலுக்கு எச்சரிக்கையும் செய்துள்ளது.
இந்நிலையில், பாலஸ்தீனியத்தை காப்பற்றக்கூறி சமூக வலைத்தளங்களில் பல்வேறு முன்னெடுப்புகள் செய்யப்படுகின்றன. உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ரேபரேலி பகுதியை சேர்ந்த காவலர் சுஹைல் அன்சாரி என்பவரும் பாலஸ்தீனியத்திற்கு ஆதரவாக முகநூல் பதிவு செய்துள்ளார்.
இதனையடுத்து, இவ்விவகாரம் காவல் துறை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு செல்லவே, அவர்கள் சம்பந்தப்பட்ட காவலரை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர். அவரிடம் துறை ரீதியான விசாரணை நடந்து வருகிறது.
கடந்த சில மாதமாகவே லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் பணியாற்றி வந்த காவலர், தற்போது சர்ச்சையில் சிக்கி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.