#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அண்ணியுடன் தீரா காதல்.. இடையூராக இருந்த அண்ணண்... தம்பி போட்ட ஸ்கெட்ச்.!
உத்திர பிரதேச மாநிலத்தில் மனைவி மற்றும் கள்ளக்காதல் இருவரும் சேர்ந்து கணவரை கொலை செய்து புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான காவல்துறையின் விசாரணையில் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
உத்திர பிரதேசம் மாநிலத்தின் முசாஃபர் நகர் பகுதிக்கு அருகே உள்ள புர்காஜி பகுதியைச் சேர்ந்தவர் சாகர் அகமது(30). இவர் தனது மனைவி ஆயிஷாவுடன் வசித்து வந்த நிலையில் கடந்த ஜூன் ஐந்தாம் தேதி மாயமானார். இது தொடர்பாக அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறை விசாரணை செய்த போது திடுக்கிடும் உண்மை சம்பவங்கள் வெளியாகி இருக்கிறது.
இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் விசாரணையை துவங்கிய போது ஆயிஷா மற்றும் சாகர் அகமதுவின் வளர்ப்பு சகோதரர் சொஹைல் ஆகியோர் மீது காவல்துறையின் சந்தேக பார்வை திரும்பி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளனர்.
சொஹைல் மற்றும் ஆயிஷா இடையே கள்ளத்தொடர்பு நீண்ட நாட்களாக இருந்திருக்கிறது இதனை அவரது கணவர் சாகர் கண்டித்து இருக்கிறார். ஆனாலும் அவர்கள் இருவரும் தங்கள் உறவை தொடர்ந்து உள்ளனர். மேலும் இதற்கு இடையூறாக இருந்த அவரது கணவர் சாகர் அகமதுவை கொலை செய்ய திட்டம் தீட்டி கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின்னர் அவரது உடலை செப்டிக் டேங்க் பள்ளத்தில் புதைத்துள்ளனர். அதன் பிறகு அவர்களிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெற்றுக் கொண்ட காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர். செப்டிக் டேங்க் பள்ளத்தில் புதைக்கப்பட்ட உடலும் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.