#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சிகிச்சைக்காக மருத்துவரை வரழைத்து ஆபாச படம் எடுத்து மிரட்டல்: 2 கல்லூரி மாணவர்கள் கைது.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காசி இந்து பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவர்கள் நாராயண் சுக்லா, சூரஜ் துபே.
இவர்கள் இருவரும் சேர்ந்து தங்களின் நண்பருக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி மருத்துவரிடம் அனுமதி வாங்கி, அவரை விடுதிக்கு வரவழைத்துள்ளனர்.
அச்சமயம் மருத்துவர் சோதனை செய்துகொண்டு இருந்தபோது, அவரை சுற்றிவளைத்த கும்பல் மருத்துவரை நிர்வாணப்படுத்தி ரூ.20 ஆயிரம் ரொக்கம், தங்க செயின், மோதிரம் போன்றவற்றை பறித்து இருக்கின்றனர்.
மேலும், நிர்வாண வீடியோ எடுத்து, வெளியே கூறினால் அதனை வெளியிடுவோம் எனவும் மிரட்டி ரூ.40 ஆயிரம் பணத்தை ஆன்லைனில் பகிர்ந்து இருக்கின்றனர்.
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், காசி இந்து பல்கலை., மாணவர்கள் நாராயண் மற்றும் சூரஜ் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.