#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"வைலன்ஸ் வைலன்ஸ்"... 2 கார்களின் மீது நின்றபடி ஸ்டன்ட் செய்த இளைஞர்... காருடன் தூக்கி உள்ளே வைத்த போலீஸ்..!
பாலிவுட் நடிகரை போல் இரண்டு கார்களின் மீது நின்றபடி பயணம் செய்து வீடியோ பதிவிட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தற்போதைய காலகட்டத்தில் பல இளைஞர்களும் சினிமாவில் வரும் ஹீரோக்களைப் போல இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் ரீல்ஸ் என்று பலவற்றை முயற்சித்து வருகின்றனர். அதில் சிலர் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடிய சாகசங்களையும் செய்து வருகின்றனர்.
இப்படி செய்வதன் மூலம் புகழ், பெயர் கிடைக்கும் என்ற எண்ணத்தில் செய்யும் இளைஞர்கள் பலரும், உயிர் போனால் ஒன்றும் கிடைக்காது என்று தெரிந்து கொள்ளாமல் இருக்கின்றனர். இதைப் போன்ற ஒரு இளைஞர் தான் தற்போது சாகசம் புரிவதாக கூறி, காவல்துறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
பாலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜய் தேவ்கன். இவர் Phool Aur Kaante என்ற ஒரு இந்தி படத்தில் இரண்டு கார்களின் மீது நின்றபடி ஸ்டன்ட் காட்சிகள் செய்துள்ளார். இதனைப் போன்று உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டா பகுதியை சேர்ந்த 21 வயது இளைஞர் ஒருவர் சாலையில் சாகசம் செய்துள்ளார்.அதனை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் ஸ்டன்ட் செய்வது போல, இளைஞரும் இரண்டு கார்களின் மீது நின்றபடி சாகசம் புரிந்துள்ளார்.
இது காவல்துறையினருக்கு தெரியவர இளைஞரை கைது செய்த காவல்துறையினர், சாகசத்திற்காக அவர் பயன்படுத்திய இரண்டு உயர்ரக கார்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
அத்துடன் 'இதுபோன்ற காட்சிகளை தொலைக்காட்சியில் பார்ப்பதோடு நிறுத்திவிடுங்கள் எனவும், இதையெல்லாம் செய்ய வேண்டும் என்ற ஆசையில் கீழே விழுந்து தலையை உடைத்துக் கொள்ளாதீர்கள்' என்றும் தெரிவித்துள்ளனர்.