எனக்கு ஓட்டு போடவில்லை என்றால், உன் உடலில் முஸ்லீம் இரத்தம் ஓடுகிறது என பொருள் - பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு.!



Uttar Pradesh Domariyaganj BJP MLA Abuse Speech

தனக்கு வாக்களிக்காத இந்து வாக்காளர்களின் உடலில் இஸ்லாமியர்களின் இரத்தம் ஓடும் என பாஜக எம்.எல்.ஏ சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் 4 கட்டமாக நடைபெற்று வருகிறது. நாளை அம்மாநில தலைநகர் லக்னோ உட்பட 9 மாவட்டத்தில் இருக்கும் 59 தொகுதியில் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை அமைக்க பாஜக மும்மரமாக செயல்பட்டு வருகிறது. 

இந்நிலையில், உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள தோமரியாகஞ் (Domariyaganj) தொகுதியின் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேந்திர பிரதாப் சிங் பேசுகையில், "இக்கிராமத்தில் வசித்து வரும் இந்து வாக்காளர்கள் பிறருக்கு வாக்களித்தால், அவர்களின் நாடி - நரம்பில் முஸ்லீம்களின் இரத்தம் உள்ளது என்று பொருள்.

 

அவர்கள் தேசத்துரோகி ஆவார்கள். முறையில்லாத பாலியல் உறவுகளால் அவர்கள் பிறந்தவர்கள். நாம் பல அவமதிப்பை சந்தித்துள்ளோம். இவ்வாறான பல சூழலுக்கு பின்னரும் இந்து மாற்று அணிக்கு சென்றால், அவர்கள் வெளியே தலைகாட்ட இயலாது. 

நீங்கள் நான் சொல்வதை கேட்கவில்லை என்றால், நான் யார் என உணர வைப்பேன். எனது சமூகத்தை யாரேனும் அழிக்க நினைத்தால், அவர்களை அளித்துவிடுவேன்" என்று தெரிவித்தார். இவரின் பேச்சுக்கள் ஊடகத்தில் வெளியே பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சித்தார்த் நகர் காவல் துறையினர் அவரின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.