#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அதிவேகத்தில் தறிகெட்டு வந்த லாரி: சாலையோர உணவகத்தில் புகுந்து 4 பேர் உடல் நசுங்கி பலி., 2 பேர் படுகாயம்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள எட்டவாக் மாவட்டம், எட்டவாக் - கான்பூர் தேசிய நெடுஞ்சாலையில், நேற்று இரவு நடந்த விபத்தில் 4 பேர் பரிதாபமாக பலியாகினர். 2 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இரவு 10:30 மணியளவில், எட்டவாக் நகரில் இருந்து கான்பூர் நோக்கி லாரி பயணித்த லாரி, சாலையோர உணவகத்தில் புகுந்து விபத்திற்குள்ளானது. அதிவேகத்தில் வந்த லாரி, உணவகம் அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தைதொடர்ந்து உணவகத்தில் புகுந்தது.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில் அப்பகுதியை சேர்ந்த சுராஜ் (வயது 32), தலிப் (வயது 30), சஞ்சய் குமார் (வயது 35), உணவகத்தின் உரிமையாளர் குல்தீப் குமார் (வயது 35) ஆகியோர் நிகழ்விடத்திலேயே பலியாகினர். நால்வரும் லாரியின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்து இருக்கின்றனர்.
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.