#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
குழந்தை வரம்வேண்டி 7 வயது சிறுமியை கொன்று உடல் உறுப்புகளை சாப்பிட்ட தம்பதி: நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி சம்பவத்தில் அதிரடி தீர்ப்பு.!
உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூர், காதம்பூர் பகுதியில் கடந்த நவம்பர் 14, 2020 அன்று பரசுராம், சுனைனா அவர்களின் உறவினர்கள் அங்குள் மற்றும் விரேன் ஆகியோர் 7 வயது சிறுமியை கொன்று அவரது உடல் உறுப்புகளை சாப்பிட்டதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறுமியின் தாய் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை காணவில்லை என காவல் நிலையத்தில் புகாரளித்ததை தொடர்ந்து, அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இந்த அதிர்ச்சி தகவலானது தெரியவந்தது.
திருமணமாகி பரசுராம் மற்றும் சுனைனா ஜோடி 19 ஆண்டுகளாக குழந்தைகள் இன்றி வசித்து வந்த நிலையில், சாமியார் ஒருவரின் பேச்சைக் கேட்டு ஏழு வயது குழந்தையின் கல்லீரலை சாப்பிட அவரை கடத்திச் சென்று கொலை செய்ததும் அம்பலமானது.
இவர்கள் மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், குற்றவாளிகள் நால்வருக்கும் வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்த நீதிபதிகள் பரசுராம் மற்றும் சுனைனா ஆகியோருக்கு ரூ.20,000 அபராதமும் அங்குள், விரேன் ஆகியோருக்கு ரூ.45,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டனர்.