#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பெற்றெடுத்த 3 குழந்தைகளை கொலை செய்து டிரங்க் பெட்டியில் அடைத்த தந்தை: நெஞ்சை உலுக்கும் கொடூரம்.!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூர் பகுதியில் நபர் ஒருவர், தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர்களின் பூர்வீகம் பீகார் ஆகும். புலம்பெயர் தொழிலாளராக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், சம்பவத்தன்று அவரின் குழந்தைகளை காணவில்லை என காவல் நிலையத்தில் தந்தையின் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், புகாரை கொடுத்துவிட்டு குடும்பத்துடன் சம்பந்தப்பட்டவர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜலந்தர் பகுதிக்கு செல்லவிருந்துள்ளார்.
இதனியடையே, சந்தேகம் அடைந்த காவல் துறையினர் வீட்டில் நடத்திய சோதனையில், மாயமானதாக கூறப்பட்ட 3 குழந்தைகளும் டிரங்க் பெட்டியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குழந்தைகளின் தந்தையாலேயே அவர்கள் கொலை செய்யப்பட்டது உறுதியானது.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட நபர் மற்றும் அவரின் மனைவியை கைது செய்துள்ள காவல் துறையினர், விசாரணை நடத்திய வருகின்றனர். கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருபவர் எப்போதும் மது போதையில் சுற்றி வருபவர் என்பதும் என்று தெரியவந்துள்ளது. அவரிடம் கொலைக்கான காரணம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.