#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
யாத்திரை சென்ற பக்தர்களுக்கு சோகம்.. தறிகெட்டு இயங்கிய லாரி மோதி 6 பேர் பலி.!
கன்வர் யாத்திரை சென்றவர்களின் மீது லாரி மோதிய விபத்தில் 6 பேர் பரிதாபமாக பலியாகினர்.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் நகரில், இன்று காலை 2.15 மணியளவில் பக்தர்கள் கன்வர் யாத்திரையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த லாரி தறிகெட்டு பக்தர்களின் மீது மோதி விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில், 6 பக்தர்கள் நிகழ்விடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சதாபாத் காவல் நிலைய அதிகாரிகள், உயிரிழந்தோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், ஹரித்துவாரில் இருந்து குவாலியருக்கு நடந்து சென்றபோது விபத்து நடந்தது தெரியவந்தது. லாரி ஓட்டுநர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.