#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடுரோட்டில் கொழுந்துவிட்டு எரிந்த வேன்! எரிந்து சாம்பலான பயணிகள்! அதிர்ச்சி சம்பவம்!
பெங்களுரு அருகே வேன் மற்றும் பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிருடன் எரிந்து சாம்பலான சம்பவம் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களுரு அருகே வேன் மற்றும் பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிருடன் எரிந்து உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயமடைந்தனர். கர்நாடக மாநிலம் துமகுருவின் குப்பியில் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் இந்த கோர விபத்து நடந்துள்ளது.
விபத்து ஏற்பட்டதையடுத்து இரண்டு வாகனங்களும் தீப்பிடித்துள்ளது. இதில், பேருந்தில் இருந்து அனைரும் காயமின்றி தப்பியுள்ளளனர். வாகனத்தில் உள்ள தீயை அணைக்க இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.
அந்த விபத்தில் தப்பித்த நான்கு பேர் மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வருகின்றனர். விபத்து தொடர்பாக குப்பி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.