#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வாயு புயல் எச்சரிக்கை! இந்திய அரசின் பலத்த பாதுகாப்பு முன்னேற்பாடுகள்!
அரபிக்கடலில் உருவாகியிருக்கும் "வாயு" புயல் காரணமாக, மீனவர்கள் அரபிக்கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறியது. அரபிக்கடலில் உருவான இந்த புயலுக்கு ‘வாயு’ என்று பெயர் சூட்டப்பட்டது. இது தீவிர புயலாக மாறி மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் குஜராத் நோக்கி நகருகிறது. இந்த புயல் வியாழக்கிழமை குஜராத் மாநிலத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புயல் கரையை கடக்கும்பொழுது மணிக்கு 110 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும், ஒரு சில இடங்களில் 135 கிலோ மீட்டர் வரை காற்றின் வேகம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் குஜராத், மகாராஷ்டிரா, கோவா கடலோரப் பகுதியில் மீனவர்கள் வரும் 15 ஆம் தேதி வரை கடலுக்குச் செல்ல வேண்டாமென எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில், வாயு புயல் குறித்த முன்னெச்சரிக்கை பணிகளுக்காக 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கவும், முப்படைகள் மற்றும் இந்திய கடலோரக் காவல் படை தயார் நிலையில் இருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.