35 நாட்கள்.. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சுனிதா உருக்கமாக போட்ட முதல் போஸ்ட்.!
வாயு புயல் முன்னெச்சரிக்கை! பாதுகாப்பு வளையத்தில் 3 லட்சம் மக்கள்; புயல் வேகத்தில் குஜராத் அரசு.!
அரபிக்கடலில் உருவாகியிருக்கும் "வாயு" புயல் காரணமாக, மீனவர்கள் அரபிக்கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறியது. அரபிக்கடலில் உருவான இந்த புயலுக்கு ‘வாயு’ என்று பெயர் சூட்டப்பட்டது. இது தீவிர புயலாக மாறி மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் குஜராத் நோக்கி நகருகிறது. இந்த புயல் வியாழக்கிழமை குஜராத் மாநிலத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புயல் கரையை கடக்கும்பொழுது மணிக்கு 110 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும், ஒரு சில இடங்களில் 135 கிலோ மீட்டர் வரை காற்றின் வேகம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் குஜராத், மகாராஷ்டிரா, கோவா கடலோரப் பகுதியில் மீனவர்கள் வரும் 15 ஆம் தேதி வரை கடலுக்குச் செல்ல வேண்டாமென எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனிடையே முன்னெச்சரிக்கை கருதி, குஜராத் மற்றும் டியூ ஆகிய இடங்களில் கடலோரத்தில் வசிக்கும் சுமார் மூன்று லட்சம் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற குஜராத் அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இதற்காக மாநிலம் முழுவதும் 700 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர 39 தேசிய பேரிடர் படையினரும் 34 ராணுவப் படையினரும் மீட்புப் பணிகளுக்காக தயாரன நிலையில் உள்ளனர்.