#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மீண்டும் வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதி! யார் படத்தில் தெரியுமா?
ஒரு துணை நடிகராக சினிமாவில் அறிமுகமான விஜய் சேதுபதி, இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். அதுமட்டும் இல்லாது, தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய அளவில் பிரபலமாகிவிட்டார் விஜய் சேதுபதி.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 96 படம் ஒரு காதல் காவியமாக கொண்டாடப்பட்டது. பொதுவாக விஜய் சேதுபதி எந்த விதமான கதாபாத்திரமாக இருந்தாலும் கச்சிதமாக பொருந்தக்கூடியவர். அவர் வில்லனாக நடித்த விக்ரம் வேதா படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. அதேபோல பேட்ட படத்திலும் வில்லனாக நடித்திருந்தார் விஜய் சேதுபதி.
மேலும் தற்போது ஒரு தெலுங்கு படத்திலும் நடித்துவருகிறார் விஜய் சேதுபதி. இந்நிலையில் அவர் தற்போது மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது.
தெலுங்கு மெகாஸ்டார் குடும்பத்தில் இருந்து வரும் புதிய நடிகரான பஞ்சா வைஷ்ணவ் தேஜ் என்ற நடிகரின் அறிமுக படத்தில் தான் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்திற்கான கதையை முன்னணி இயக்குனர் சுகுமார் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.