பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
விராட்கோலி வீட்டில் விசேஷம்..! குவியும் வாழ்த்துக்கள்..! வைரலாகும் புகைப்படம்.!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தான் அப்பாவாகப்போகும் மகிழ்ச்சியான செய்தியை தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
உலக அளவில் மிகவும் பிரபலமான கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி. விராட் கோலியும் இந்திய பாலிவுட் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகைகளின் ஒருவருமான அனுஷ்கா சர்மாவும் காதலித்து வந்த நிலையில் இவர்கள் இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் முடிந்து ஏறக்குறைய 3 ஆண்டுகள் நெருங்கிவிட்ட நிலையில் தற்போது தான் அப்பாவாகப்போகும் மகிழ்ச்சியான செய்தியை விராட் கோலி தனது சமூகவலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில் "தனது மனைவி அனுஷ்கா ஷர்மா கர்ப்பமாக இருப்பதாகவும், இனிமேல் தாங்கள் இருவரல்ல 3 பேர் எனவும் விராட் கோலி அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் குழந்தை பிறக்கும் என்பதையும் விராட்கோலி அந்த பதிவில் தெரிவித்துள்ளார்".
இதே பதிவை அனுஷ்கா சர்மாவும் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள நிலையில் விராட் கோலி, அனுஷ்கா சர்மா இருவருக்கும் அவரது ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
And then, we were three! Arriving Jan 2021 ❤️🙏 pic.twitter.com/0BDSogBM1n
— Virat Kohli (@imVkohli) August 27, 2020