தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
25 இலட்சம் வாடிக்கையாளர்களை இழந்த ஐடியா-வோடபோன்.. தட்டித்தூட்கிய ஜியோ: டிராய் அறிவிப்பு.!
இந்திய அளவில் தொலைத்தொடர்பு சேவையை வழங்க பி.எஸ்.என்.எல்., ஏர்டெல், ஐடியா-வோடபோன், ஜியோ, டாட்டா டோக்கமோ, யூனினார் போன்ற பல நிறுவனங்கள் இருக்கின்றன. இவற்றில் பி.எஸ்.என்.எல்., ஏர்டெல், ஜியோ, ஐடியா போன்றவை அதிகளவு உபயோகம் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மத்திய தொலைத்தொடர்பு நிறுவனம் (TRAI) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வோடபோன்-ஐடியா நிறுவனங்கள் கடந்த அக். மாதத்தில் தனது 14 இலட்சம் வாடிக்கையாளர்களை இழந்து, அவர்கள் ஜியோ நெட்ஒர்க்கை தேர்வு செய்துள்ளார்கள்.
அதேபோல, நவம்பரில் 8 இலட்சம் வாடிக்கையாளர்களை இழந்து அவர்கள் பாரத் ஏர்டெல் நெட்ஒர்க்கை தேர்வு செய்துள்ளார்கள். மொத்தமாக தற்போது வரை வோடபோன்-ஐடியா நெட்ஒர்க் நிறுவனம் தனது 35 இலட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது.
இவர்கள் அனைவரும் பெரும்பாலாக ஜியோ, ஏர்டெல் மற்றும் பிற நெட்ஒர்க்களுக்கு மாறி இருக்கின்றனர். அக். - செப் இடைப்பட்ட மாதங்களில் அதிக வாடிக்கையாளர்கள் வோடபோன்-ஐடியா அமைப்பை விட்டு விலகி இருக்கின்றனர்.