ஆத்தி என்ன குளிரு.. மலைப்பகுதியில் பனிப்பொழிவில் சிக்கித் தவித்த நாய்.. பத்திரமாக மீட்ட மீட்பு குழுவினர்..!



What a cold day.. The dog stuck in the snow in the mountains.. The rescue team rescued it safely..!

அமெரிக்காவில் யூட்டா மலைப்பகுதியில் கடுமையான பனிப்பொழிவில் நாய் ஒன்று சிக்கிக் கொண்டு உயிருக்கு போராடிய சம்பவம் பார்ப்போரின் கண்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது.

இதனையடுத்து நாலா என்ற பெயருடைய அந்த நாய் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு கேனியன் நீர்வீழ்ச்சி அருகே தனது உரிமையாளருடன் நடைப்பயணம் மேற்கொண்ட போது வழித்தவறி காணாமல் போனது.மேலும் நாலா என்ற பெயருடைய அந்த நாய் வழித்தவரி ஒரு மலைக்குன்றின் உச்சியில் கடுங்குளிரில் ஆபத்தான நிலையில் நின்றிருந்ததை போலீசார் ட்ரோன் கேமரா மூலம் கண்டறிந்தனர்.

இதனையடுத்து உடனடியாக அங்கு விரைந்த மீட்பு குழுவினர் கடும் பனிப்பொழிவில் சிக்கித் தவித்த நாலா என்ற நாயை மீட்டு அதன் உரிமையாளரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.