பிரதமர் மோடி ஏன் இன்று இரவு ஒன்பது மணிக்கு ஒன்பது நிமிடங்கள் விளக்கு ஏற்ற சொன்னார்.?



Why modi said light off

பிரதமர் மோடி ஏப்ரல் 5ம் தேதி இரவு 9 மணிக்கு ஒரு விளக்கேற்றி ஒளிரவிடுங்கள் என சொன்னதை வைத்து சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் போட்டு கலாய்க்கின்றனர். ஆனால் விளக்கேற்றுவதன் பின் அர்த்தமும் உள்ளது.

கொரோனா பாதிப்பு உலகையே உலுக்கிக் கொண்டிருக்கின்றது. இந்தியாவிலும் அதன் தாக்கம் அதிகரித்து வருகின்றது. நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்குதலால் நோய்த்தொற்று பரவும் எண்ணிக்கையும், இறந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.

கொரோனவை கட்டுப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 9 மணிக்கு மின்சார விளக்குகள் அனைத்து, அகல் விளக்கை ஏற்றி 9 நிமிடங்கள் ஒளிர விடுங்கள் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அவரது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை
வெளியிட்டுள்ளார்.

அதில், பிரதமர் மோடி அவர்களின் வேண்டுகோளுக்கு அனைவரும் ஆதரவு தெரிவித்து, அனைவரும் ஒளியேற்ற வேண்டும். நம் பாரத பிரதமர் மோடி அவர்கள், நம் அனைவரும் நம் இல்லங்களுக்கு முன்னால் தீபம் ஏற்ற வேண்டும். தீபங்கள் இல்லையென்றால் மெழுகுவர்த்திகள் ஏற்றலாம். அதுவுமில்லை என்றால் டார்ச் லைட்டுகளை ஒளிர விடலாம். அதுவுமில்லை என்றால் நம் செல்போன் ஒளிகளை ஒளிரவிடலாம் என தெரிவித்துள்ளார்.

சத்தத்திற்கென்று ஒரு சக்தி இருக்கிறது. அதனால் சத்தம் எழுப்பி, ஒலி எழுப்பி மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்தோம். ஒளிக்கென்று ஒரு சக்தி இருக்கிறது. அதனால் ஒளி ஏற்றி நமக்கு நாமே நன்றி சொல்லிக் கொள்வோம் என தெரிவித்தார்.