#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கணவரின் கண்முன்னே மனைவி கூட்டாக சீரழித்த கும்பல்.. 2 சிறார்கள் உட்பட 10 பேர்., பதறவைக்கும் சம்பவம்..!
உடல்நிலை சரியில்லாத குழந்தையை பார்க்க பதறியபடி வீட்டிற்கு வந்த பெண்மணி, கணவர் கண்முன்னே 4 பேரால் பலாத்காரம் செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது. இந்த துயரத்தை 6 பேர் வேடிக்கை பார்த்த பயங்கரம் மறித்துப்போன மனிதத்தை உணர்த்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திர பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த தம்பதி, சம்பவதினத்தன்று கணவரின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரை பார்ப்பதற்காக மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளனர். பின்னர், இரவில் அங்கேயே தங்கியிருந்து, காலை செல்லலாம் என முடிவு செய்துள்ளனர்.
தம்பதியின் குழந்தை வீட்டில் இருந்த நிலையில், குழந்தைக்கு திடீரென்று கடுமையான காய்ச்சல் ஏற்பட்ட காரணத்தால், குழந்தையை பார்ப்பதற்காக அவசர அவசரமாக இரவு நேரத்தில் வீடு திரும்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நடந்து சென்ற தம்பதிகளை திருமணத்திற்கு சென்று திரும்பிய 10 பேர் அடங்கிய கும்பல் ஒன்று வழிமறித்தது.
அந்த கும்பல் பெண்ணின் கணவரை சரமாரியாக தாக்கிய நிலையில், அவரை மரத்தில் கட்டி வைத்து, அவரது கண் முன்னே மனைவியை 4 பேர் சேர்ந்து கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இது குறித்து தம்பதி அளித்த புகாரின் பேரில், முசாபர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
விசாரணையில் 10 பேரை காவல்துறையினர் கைது செய்து இருக்கின்றனர். கைது செய்தவர்களில் இரண்டு பேர் சிறுவர்கள் என்ற அதிர்ச்சி தகவலும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து முசாபர் நகர் சப்-இன்ஸ்பெக்டர் அபிஷேக் யாதவ் தெரிவிக்கையில், "குற்றவாளிகள் அனைவரின் மீதும் வழக்கு பதிவு செய்து இருக்கின்றோம். 4 பேர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். மற்றவர்கள் அதனை வேடிக்கை பார்த்துள்ளனர். அவர்களில் இருவர் சிறார்கள்." என்று கூறினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.