#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
திடீரென சொந்த ஊருக்கு திரும்பிய கணவர்... ஆத்திரத்தில் மனைவி செய்த கொடூரம்...
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கரிகசீனேப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஹரிஷ் குமார் - சினேகா தம்பதியினர். ஹரிஷ்குமார் ஹைதராபாத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் மனைவியுடன் அங்கே தங்கி இருந்துள்ளார்.
அப்போது சினேகாவிற்கு ராமகுப்பம் அடுத்த தேக்குமானுதாண்டா பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. கணவர் வேலைக்குச் சென்ற பின்னர் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் திடீரென ஹரிஷ் குமாருக்கு வேலை சரிவர வராததால் மனைவியை அழைத்து கொண்டு சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சினேகா சதிஷ் குமாருடன் கள்ளத்தொடர்பை தொடர என்ன செய்யலாம் என திட்டம் போட்டுள்ளார். அதன்படி கூலிப்படையை ஏவி கணவரை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளார்.
அதன்படி கடந்த 25 ஆம் தேதி வனப்பகுதியில் பதுங்கியிருந்த கூலிப்படையினர் தனிமையில் வந்த ஹரிஷ் குமாரை கொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளனர். பின்னர் வெளியே சென்ற கணவர் வீடு திரும்பவில்லை என சினேகா போலீசில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சினேகாவின் மீது சந்தேகம் இருந்ததால் அவரிடம் துருவி துருவி விசாரணை நடத்தி இருக்கிறார்கள். அதில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கூலிப்படையினரை ஏவி கணவரை கொன்றதை ஒப்புக் கொண்டிருக்கிறார் சினேகா. இதையடுத்து சினேகா , சதீஷ்குமார் உட்பட ஏழு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.