#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கணவரின் கொடுமையால் தூக்கில் தொங்கிய இளம்பெண்! தற்கொலைக்கு முன் செய்த காரியத்தால் ஆடிபோன குடும்பத்தார்கள்!
மத்திய பிரதேச மாநிலம் கசாபாத் என்னும் கிராமத்தில் வசித்து வந்தவர் கல்லு படேல். இவரது மனைவி ராமலல்லி. 30 வயது நிறைந்த இவருக்கு திருமணமாகி எட்டு வருடங்கள் ஆகிறது. இந்நிலையில் திருமணமான சில நாட்களிலிருந்தே கணவன், மனைவி மற்றும் நாத்தனார் இவரை கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.
மேலும் ராமலல்லி தவறு எதுவும் செய்யாத நிலையிலும், அவர் மீது பழிபோட்டு தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளனர். இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் தற்கொலைக்கு முன்பு ராமலல்லி தனது கால் மற்றும் தொடை பகுதிகளில் கணவன் குடும்பத்தார்கள் தனக்கு கொடுத்த கொடுமைகள் குறித்து எழுதியுள்ளார்.
இந்நிலையில் ராமலீலா தற்கொலை செய்து கொண்டதை கண்ட கணவரின் குடும்பத்தார்கள் அவசரஅவசரமாக அவரை அடக்கம் செய்ய முயற்சி செய்துள்ளனர்.
இதற்கிடையில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலிசார் ராமலல்லியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அவர் உடலில் எழுதியிருந்த கடிதத்தையும் புகைப்படம் எடுத்துள்ளனர். இந்நிலையில் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ராமலல்லியின் தற்கொலைக்கு காரணமானவர்கள் கண்டிப்பாக கைது செய்யப்படுவார் எனவும் கூறியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.