பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
Wow.. இந்தியாவில் அறிமுகமான மெர்சிடஸ் பென்ஸின் புதிய கார்..!
ஆடம்பர வாழ்க்கை என்றாலே நம் மனதில் ரிங்காரம் இடுவது கார் தான். அதிலும் மெர்சிடஸ் பென்ஸ் போன்ற விலை உயர்ந்த கார்களில் ஒருமுறையாவது பயணித்தாக வேண்டும் என்பது கார் பிரியர்களின் தீவிர ஆசை என்றே கூறலாம். மேலும் காலத்திற்கு ஏற்ப கார்களில் பல மாற்றங்களை கொண்டு வருவது மெர்சிடஸ்க்கு நிகர் மெர்சிடஸ் மட்டுமே.
அந்த வகையில் ஜெர்மனியை சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடஸ் பென்ஸ் AMG E 53 4MATIC + Cabriolet என்ற புதுவகையான காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த மெர்சிடஸ் பென்ஸ்ன் விலை 1 கோடியே 30 லட்சம் என அந்நிறுவனத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காரானது 4.6 வினாடிகளில் 100 கி.மீ வேகத்தை அடையும் எனவும் அதிகபட்சமாக மணிக்கு 250 கி.மீ வேகம் செல்லும் என்றும் கூறப்படுகிறது.