#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தலையில் கல்லை போட்டு இளம் பெண் கொடூர கொலை.. போலீசார் தீவிர விசாரணை!
கர்நாடக மாநிலம் காந்திநகர் பகுதியில் உள்ள டபுள் ரோட்டில் ஜனதா கூட்டுறவு வங்கி கட்டிடம் உள்ளது. இதன் அருகே ஒரு பாழடைந்த கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் இருந்து மிகவும் மோசமான துர்நாற்றம் வீசியுள்ளது.
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அங்கு சென்று பார்த்த போது தலையில் கல்லை போட்டு பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து அழுகிய நிலையில் கிடந்த இளம் பெண்ணின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த பெண் யார் எதற்காக கொலை செய்யப்பட்டார் என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.