#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
டெல்லி வன்முறை! இஸ்லாமிய நண்பர்களை காப்பாற்ற போராடிய இளைஞர்! நள்ளிரவு முழுவதும் துடிதுடித்த அவலம்!
டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்து வரும் போராட்டம் கலவரமாக மாறியது. இதனால் டெல்லி முழுவதும் கலவரபூமியாக மாறியுள்ளது. கடைகள் அடித்து நொறுக்கப்பட்டு, தீ வைக்கப்பட்டுள்ளது, பொதுமக்கள் தாக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த கலவரத்தால் இதுவரை 35க்கும் அதிகமான பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் பலர் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிவி விகார் பகுதியில் வசித்து வருபவர் பிரேம்காந்த் பாகேல். இந்நிலையில் வன்முறையின்போது அவரது வீட்டிற்கு அருகிலுள்ள இஸ்லாமிய நண்பர்களின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பிரேம்காந்த் எரியும் வீட்டிற்குள் நுழைந்து தீயில் சிக்கிய இஸ்லாமிய நண்பர்களைக் காப்பாற்ற முற்பட்டுள்ளார். ஆறு இஸ்லாமிய நண்பர்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.
அப்பொழுது நெருப்பில் சிக்கிய தனது நண்பரின் வயதான தாயை காப்பாற்ற பிரேம்காந்த் முயற்சி செய்த போது, அவருக்கு பலத்த தீ காயங்கள் ஏற்பட்டது. ஆனால் அப்பொழுது அவரை மருத்துமனைக்கு அழைத்துச் செல்ல ஒருவாகனம் கூட கிடைக்கவில்லை. மேலும் ஆம்புலன்ஸை அழைத்த போதும், வரவில்லை. இதனால் அவர் இரவு முழுவதும் உடலில் ஏற்பட்ட 70 சதவீத தீக்காயங்களுடன் அவதிப்பட்டு வந்துள்ளார். பின்னர் காலை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து பிரேம்காந்த், எங்கள் பகுதியில் இந்து மற்றும் இஸ்லாமிய நண்பர்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறோம். தனது நண்பரின் தாயை காப்பாற்றியது மகிழ்ச்சி என வேதனையுடன் கூறியுள்ளார்.