"ஒற்றுமையே பலம்" - துப்பாக்கியுடன் நுழைந்த திருடனை விரட்டிப்பிடித்த மக்கள்..!



  a thief Caught by peoples robbery Attempt failure 

திருட்டு, வழிப்பறி, கொலை போன்ற சம்பவங்கள் உலகளவில் பாரபட்சமின்றி தொடருகிறது. தனக்கு கிடைக்கும் வாய்ப்பை சாதகமாக்கி, அதன் வாயிலாக சம்பாத்தியத்தை ஈட்டும் செயலை திருட்டு கும்பல்கள் தொடர்ந்து வருகிறது.

தனிநபராக/குழுவாக சேர்ந்து செய்யப்படும் திருட்டுகளில்,மேலை நாடுகளில் துப்பாக்கி முனையில் அவை முன்னெடுக்கப்படுகின்றன. இதனிடையே, கொள்ளை எண்ணத்துடன் துப்பாக்கியுடன் வணிக வளாகத்திற்குள் நுழைந்த திருடனை, மக்கள் ஒன்று சேர்ந்து பிடித்த காணொளி வெளியாகியுள்ளது.

திசைதிருப்பி பிடிக்கப்பட்ட திருடன்

எங்கு எடுக்கப்பட்டது என்பது குறித்த விபரம் இல்லாத காணொளியில், திருடன் தனது கைதுப்பாக்கியுடன் வணிக வளாகத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபடுகிறார். அப்போது, அங்கு இருக்கும் நபர்கள் அவரை திசைதிருப்பி, துப்பாக்கியை தள்ளிவிடுகின்றனர். 

இதையும் படிங்க: லூடோ ஆடலாம் வரியா.. திருமண மேடையில் விளையாட்டு; மணமகன் அட்ராசிட்டி அலப்பறை.!

அவர்களிடம் இருந்து சட்டையை கழற்றிவிட்டு ஓட்டம் பிடித்த நபரை, இறுதியாக வணிக வளாக ஊழியர் பிடித்துக்கொடுக்கிறார். இதுதொடர்பான காணொளி வெளியாகி வைரலாகி வருகிறது. ஒற்றுமையாக இருந்தால் அதுவே நமது பலம் என்பதை உணர்த்தும் வகையில், திருடனை பிடிக்கும் காணொளி வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: ரசகுல்லாவா? விஷகுல்லாவா? இனிப்பு விரும்பிக்கு காத்திருந்த அதிர்ச்சி.!