ரசகுல்லாவா? விஷகுல்லாவா? இனிப்பு விரும்பிக்கு காத்திருந்த அதிர்ச்சி.!
பலரும் விரும்பி சாப்பிடும் ரசகுல்லாவின் உணவுப்பாதுகாப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இனிப்பு வகை உணவுகளில், பலருக்கும் பிடித்த ஒன்று ரசகுல்லா. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, பலரும் விரும்பி சாப்பிடும் ரசகுல்லா இனிப்பகங்களில் பிரதான விற்பனையில் இடம்பெறும் பொருளாகவும் இருக்கிறது.
இதனிடையே, சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், ரசகுல்லா வாங்கி சாப்பிட காத்திருந்த இனிப்பு பிரியருக்கு காத்திருந்த அதிர்ச்சி குறித்த தகவல் பகிரப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மழைக்கு நடுவே குட்டியுடன் அடைக்கலம் தேடிய நாய்; வைரலாகும் மனம் நெகிழவைக்கும் வீடியோ.!
சில நாட்களுக்கு முன்னதாக வாங்கப்பட்ட ரசகுல்லாவை, இனிப்பு பிரியர் எடுத்து சாப்பிட முற்பட்டுள்ளார். அப்போது, அதன் சுவை மற்றும் ரசகுலாவுக்கான உணவுப்பதத்தில் மாற்றம் தெரிந்துள்ளது.
ரசகுலவா? தெர்மகோலா?
இதனால் சந்தேகமடைந்தவர் அதனை கைகளில் எடுத்துப் பார்த்தபோது, தர்மாகோலை போல தோற்றம் அளித்துள்ளது. நீரில் இருந்து எடுத்து கையில் அழுத்தி பார்த்தபோது, அது மீண்டும் இயல்பு நிலைக்கே திரும்பியது.
மேலும் ரசகுல்லா அடைக்கப்பட்ட பாத்திரத்தில் முடி ஒன்று இருந்ததால், ஆசையாக சாப்பிட வாங்கிய ரசகுல்லாவை சாப்பிடாமல் தூர வைத்தவர் விழிப்புணர்வுக்காக வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
மேற்படி விபரங்கள் சேகரிக்கப்படுகிறது. இன்றளவில் உணவின் தரம் என்பது மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்துகிறது.
இதையும் படிங்க: இப்படி ஒரு மாண்புமிகு முதலாளியா? பெஞ்சல் புயலும், விடுமுறையும்.. வைரலாகும் உரையாடல்.!