பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
வெள்ளை முடியால் அவதிபடுபவரா நீங்கள்.? இதை சாப்பிடுங்கள் மாற்றத்தை நீங்களே காண்பீர்கள்..!
நம்மில் பெரும்பாலானோர் தலையில் ஏற்படும் வெள்ளை முடியினால் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் பொது இடங்களுக்கு செல்வதை அனேகபேர் தவிர்த்து விடுகின்றனர். மேலும் இந்த வெள்ளை முடிகளை மறைப்பதற்காக கலரிங் மற்றும் டை போன்ற செயற்கை வழிகளையே நாடி உடலுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்திக் கொள்கின்றனர்.
ஆனால் இயற்கையாகவே தலையில் ஏற்படும் வெள்ளை முடிகளை நாம் எடுத்துக் கொள்ள உணவுகளை கொண்டு அகற்ற முடியும். அவையாவன 1) பொதுவாக நாம் உட்கொள்ளும் டார்க் சாக்லேட்டுகளில் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த ஆன்டி ஆக்ஸிடென்டுகள் தலைமுடியில் முன்கூட்டியே நரைக்கச் செய்யும் நச்சுக்களை உடலில் இருந்து முற்றிலுமாக அகற்ற உதவுகின்றன.
2) நாம் தினமும் நெல்லிக்காய் சாப்பிடுவதன் மூலம் நம் தலையில் முன்கூட்டியே நரைக்கக்கூடிய முடிகளின் நரையின் விளைவுகளை மாற்ற முடியும். மேலும் நெல்லிக்காயில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் முடியின் வேர்களை வலுப்படுத்தி பளபளப்பு தன்மையுடன் வைக்க உதவுகிறது.
3) மேலும் அன்றாடம் நாம் எடுத்துக் கொள்ளும் பருப்புகளில் புரதம் மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ளன. அதிலும் குறிப்பாக வைட்டமின் பி9 முடியின் ஆரோக்கியத்திற்க சிறந்த ஊட்டச்சத்தாக அமைகிறது. 4) பால் பொருட்களான பால், பாலாடை கட்டி, தயிர் போன்ற பொருட்களில் வைட்டமின் பி12 மற்றும் கால்சியம் அதிகம் காணப்படுவதால் இவை முடி நரைப்பதை தடுத்து முடிக்கு தேவையான ஊட்டச்சத்தை கொடுக்கிறது.
5) சோயாபீன்சில் அதிக ஆன்டி ஆக்சிடென்ட் காணப்படுவதால் இதை உட்கொள்ளும் போது நம் உடலில் இருக்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்களை அகற்றி ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு ஊக்குவிக்கிறது. 6) கருவேப்பிலை முடி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை ரத்தத்தை சுத்தப்படுத்தவும் உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க மிகவும் உதவி செய்கிறது.