மது அருந்துபவர்களுக்கு இந்த அறிகுறி வந்துவிட்டால் உடனே நிறுத்திவிடுங்கள்! இல்லாவிட்டால் உயிருக்கே ஆபத்து!
தற்போதைய வாழ்க்கை முறையில் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. பல இளைஞர்கள் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி, அவர்களது வாழ்க்கையை சீரழித்து கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் மதுவை ஒழிப்பதற்காக பெண்களும், பல அரசியல் தலைவர்களும் நீண்ட காலமாக போராடி வருகின்றனர். ஆனாலும் தமிழகத்தில் மதுக் கடையை அரசாங்கமே நடத்தி வருகிறது. தமிழகத்தில் பல இடங்களில் சூப்பர் மார்க்கெட் போல, எலைட் எனும் கடைகளை அதிகப்படுத்தி வருகின்றனர். இளைஞர்கள் ஆரம்பத்தில் நாம் ஒரு பீர் தானே சாப்பிடுகிறோம், என இந்த பழக்கத்தை ஆரம்பித்து, இந்த பழக்கம் நாளடைவில் அவர்களை மதுவிற்கு அடிமையாக்கி விடும்.
மது அருந்துபவர்களுக்கு முதலில் பாதிக்கப்படுவது கணையம் மற்றும் கல்லீரல் ஆகும். தொடர்ந்து மது அருந்துபர்களுக்கு கணையம், கல்லீரல், சிறுநீரகம் போன்றவை விரைவில் செயலிழக்கும். மது அருந்துபவர்களுக்கு, வயிறு வீக்கமோ, ரத்த வந்தியோ வந்தால் உடனே இந்த பழக்கத்தை கைவிட வேண்டும். இல்லாவிட்டால் உயிரிழக்க நேரிடும். கல்லீரல் பழுதடைந்துவிட்டால் முதலில் வரும் அறிகுறி வயிறு வீக்கம், வாய் குமட்டல், வயிறு லேசாக வலித்தல் போன்ற பிரச்சனைகள் தான்.
மது பழக்கத்தினால் பணம் அழிவது மட்டுமின்றி, நமது அடுத்த தலைமுறையும் இல்லாமல் போவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. தற்போது அதிகம் உயிரிழப்பவர்களில் மது அருந்தியவர்கள் தான் அதிகம் இறக்கின்றனர். எனவே இந்த பழக்கத்தினால் உங்களை மாய்த்துகொள்வது மட்டுமல்லாமல், உங்களை நம்பி வாழும் உங்கள் மனைவி, பிள்ளைகளையும் நடுரோட்டில் நிற்கவைக்காதீர்கள்.