"மூங்கில் குருத்து பாத்திருக்கீங்களா? இதை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?!"



Benefits of Bamboo sticks

மூங்கில் மரங்கள் பச்சை நிறத்தில் மிக உயரமாக வானுயர வளரும் தன்மை கொண்டவை. ஏழைகளின் மரம் என்று அழைக்கப்படும் மூங்கில் மரங்கள் ஏராளமான மருத்துவ குணங்களை தன்னுள் கொண்டுள்ளன. வட கிழக்கு மாநிலங்களில் இவை பரவலான உணவாக பயன்படுத்தப் படுகின்றன.

Bamboo

இவற்றில் உள்ள நன்மைகளை இங்கு பார்ப்போம். இந்த மூங்கில் குருத்துக்கள் இதய தமனியில் உள்ள அடைப்பை சரி செய்யவும், கெட்ட கொழுப்புகளை கரைக்கவும் உதவுகின்றன. இதய நோயாளிகள் வாரத்திற்கு இரண்டு முறை மூங்கில் குருத்துக்களை சாப்பிடுவது நல்லது.

இதில் நிறைந்துள்ள விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. இதை குளிர்காலத்தில் உட்கொண்டால், கிருமித் தொற்றிலிருந்து நம்மை காக்கும். மேலும் இதில் குறைந்த அளவு கலோரிகளே உள்ளதால் எடை குறைப்புக்கு உதவும். 

Bamboo

விஷ உயிரினங்கள் கடித்த இடத்தில் இந்த மூங்கில் சாற்றை தடவலாம். மேலும் இது நுரையீரலை வலுப்படுத்த உதவுகிறது. மேழும் கர்ப்பிணி பெண்கள் மூங்கில் தளிர்களை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.